கமுதி: ஓடும் பேரூந்தில் பெண்ணிடம் 5 பவுன் நகையை திருடிய 2 பெண்கள் கைது

                                   


மதுரையில் இருந்து கமுதிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது.  நேற்று அந்தபஸ்சில்  பார்த்திபணூரில் இருந்து அபிராமம் கமுதி வரும் வழியில் உள்ள வழிமறிச்சான் கிராமத்து ஸ்டாப் வந்த போது அன்னமயில் 55, என்ற பெண் ஏறினார்.

இதே பஸ்சில் பயணம் செய்து வந்த  ராமநாதபுரம் அருகே குயவன்குடியை சேர்ந்த ஈஸ்வரி 35, செல்வி 38, இருவரும் செய்யாமங்களம் அருகே பஸ் வந்த போது அன்னமயில் அணிந்திருந்த ஐந்து பவுன் செயினை திருடினர்.பின் அடுத்து வந்த விரதக்குளம் பஸ் ஸ்டாப்பில் இருவரும் இறங்கினார்கள். அப்போது நகை திருட்டு போனது குறித்து அன்னமயில் பஸ்சில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். நகையை திருடி விட்டு இறங்கி பதுங்கிய இரண்டு பெண்களையும் பஸ்சில் பயணம் செய்த முதுகுளத்துார் போலீஸ் ஏட்டு முருகன் பிடித்து அபிராமம் போலீசில் ஒப்படைத்தார். ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்ட ஈஸ்வரி 35, செல்வி 38, இருவரையும் போலீசார் கைது செய்து நகையை கைப்பற்றினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நகை திருட்டில் ஈடுபட்டு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பெண்களையும் பிடித்த ஏட்டு முருகனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Post a Comment

0 Comments