திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த சிற்றரசூர் பகுதியில் 50 மாற்று திறனாளிகளுக்கும்,முதியோர்களுக்கும் பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள்,10 கிலோ மற்றும் 5 கிலோ அரிசி,ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள்,மதிய உணவாக பிரியாணி, ஆண்களுக்கு லுங்கி டவல், பெண்களுக்கு புடவை என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனை அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள் வசந்தகுமார்,ஆனந்தி ஆகியோர் வழங்கினர்.மேலும் முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜா,கெஜலட்சுமி,கல்பனா,சுமதி உள்ளிட்டோர் இணைந்து வழங்கினர்.இதில் மாற்றுத்திறனாளிகள்,அவர்களது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


0 Comments