காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ வண்டமருள் பூங்குழலாள் சமேத அருணாச்லேஸ்வரர் திருக்கோயிலில் கன்னிகா பூஜை விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் 13 வயதுக்கு உட்பட்ட 51 இளம் கன்னிப் பெண்கள் கலந்து கொண்டு, பாரம்பரிய உடை அணிந்து தங்களின் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் வழிபாடு செய்தனர். அவர்களுக்கு வளையல்கள் மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் வழங்கப்பட்டன.
வேத மந்திரங்கள் முழங்க, அம்மன் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.
பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, பக்தர்கள் புடைசூழ, திருக்கோயிலைச் சுற்றி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.வீதி உலாவின் போது பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டதுடன், பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கன்னிகா பூஜை மற்றும் சுவாமி வீதி உலா நிகழ்வு, திருக்கோயில் பகுதியை ஆன்மீக ஒளியும், பக்தி சூழலும் நிறைந்ததாக மாற்றியது.இந்த கன்னிகா பூஜைக்கான உபய ஏற்பாடுகளை பி. கலையரசன், பி.ஆர். பிரகாஷ், பி.ஆர். முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
திருக்குவளை நிருபர் த.கண்ணன்



0 Comments