9ம் ஆண்டு நமது குடும்ப விழா...... கோலாகலமாக கொண்டாடிய யாதவ சமுதாயத்தினர்...... அசத்திய துரும்புப்பட்டி எம்.தனுஷ்கோடி.....

 





சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆண்டு தோரும் தை 3ம் தேதி நமது குடும்ப விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் தை 3ம் தேதி காரைக்குடி பிஎல்பி பேலஸில் நமது குடும்ப விழா தலைவர் துரும்புப்பட்டி எம்.தனுஷ்கோடி தலைமையில் கோலகலமாக நடைபெற்றது. 

நமது குடும்ப விழா தலைவர் எம்.தனுஷ்கோடி

இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட யாதவ சமுதாய குடும்பங்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் குழந்தைகள்,ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வருகை தந்த அனைத்து குடும்ப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு திருப்பத்தூர் ஷண்முகா ஜூவல்லர்ஸ் குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியும்,குடும்ப விழா உறுப்பினர்களின் கலந்துரையாடலும் அதனை தொடர்ந்து சாதனை பெண்களுக்கு பல்வேறு வகையான விருதுகளும், 10ஆம் வகுப்பு,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பரிசுகள் வழங்கப்பட்டது. குறிப்பாக குழந்தைகளும், பெரியவர்களும் கொண்டாடும் வகையில் 90களில் கிடைக்க கூடிய மிட்டாய்களுடன் கூடிய பெட்டிக்கடையும்,தின்ன தின்ன திகற்றும் அளவுக்கு அனைத்து வகை வாழைப்பழங்களும்,செட்டிநாடு பலகாரங்களும்,பாப்கார்ன்,டீ,வடை பஜ்ஜி போன்றவைகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்தன.காரைக்குடி என்றால் சாப்பாட்டிற்கு சொல்வா வேண்டும். செட்டிநாடு சுவையில் அனைவருக்கும் தலை வாழை இலையுடன் மதியவிருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவின் சிறப்பம்சமே சிறப்பு விருந்தினர்கள் யாரும் கிடையாது. யாருக்கும் நேரில் அழைப்பிதழ் கிடையாது.

 வாட்சப் குருப்பில் மட்டுமே ஆலோசனை பெற்று பதிவு செய்து உறவுகளை வலுப்படுத்தி,கலந்து கொண்டது தான் இதன் சிறப்பம்சம். இவ்விழாவினை நமது குடும்ப விழா தலைவர் துருப்புப்பட்டி எம்.தனுஷ்கோடி 9 வருடமாக நடத்தி அசத்தியுள்ளார். 100 வருடங்களை கடக்க வாழ்த்துவோம். 9ம் ஆண்டு நமது குடும்ப விழா சிறக்க அல்லும் பகலும் உழைத்த நமது குடும்ப விழா ஏற்பாட்டு குழு என்பது குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments