தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் 9 வது சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் 9 வது  சித்த மருத்துவ தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சித்த மருத்துவ தினத்தின்  சிறப்பை பற்றி சித்த மருத்துவ அலுவலர் லதா அவர்கள் விளக்கிக் கூறினார். ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் ஆயுஷ் மருத்துவத்தின் வாழ்வியல் முறை குறித்து விளக்கினார் இந்நிகழ்வில் மருந்தாளுநர்கள் சுப்புலட்சுமி சுமித்ரா சாந்தி மருத்துவ பணியாளர் சுப்பிரமணியன் அலுவலக உதவியாளர் மனோ உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்றனர். பங்குபெற்ற அனைவருக்கும் இயற்கை உணவுகள் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments