கீழக்கரையில் பள்ளி மாணவர்களுக்கு ATL LAB பயிற்சி வகுப்பு

 


இராமநாதபுரம் மாவட்டம் ஹமீதியா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள ATL LAB மற்றும் SHELL NXPLORERS இணைந்து ENERGY CLUB துவக்க விழா நிகழ்ச்சி ஜன,22 அன்று நடைபெற்றது. 

 இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் ஜவகர் பாரூக் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்கள் முகமது சதக் இன்ஜினியர் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி உரை நிகழ்த்தினார்கள்.பள்ளி ஆசிரியர்கள் முகைதீன் பிச்சை என்ற யராபத், அஜீஸ் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.

தக்கலை பீர் முகமது, பஷீர் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக திகழ்ந்தனர்,அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள்  ஒத்துழைப்பு வழங்கி நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.

Post a Comment

0 Comments