பொன்னேரி அருகே புத்தாண்டில் கண் திறந்த முருகன் சிலை.....

 


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே புளியந்தோப்பு பகுதியில் ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு  பாலமுருகன் சிலை இன்று திடீரென கண் திறந்தது பக்தர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது இன்று புத்தாண்டு என்பதால் காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு படையெடுத்த நிலையில் திடீரென முருகப்பெருமான் கண் திறந்ததாக கூறி பக்தர்கள் கூறினார். 

இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற நிலையில் புத்தாண்டில் முருகன் கண் திறந்து பார்த்து விட்டார் இனி நல்லதே நடக்கும் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.மேலும் அதே நேரத்தில் பொதுவாக சிற்பிகள் சிலைகளை வடிவமைக்கும் போது கண்களை நல்ல தீட்டி  இருந்தால் சில நேரங்களில் அதில் ஒளிபடும்போது இவ்வாறு பிரகாசமாக கண் திறப்பது போல காட்சி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் அதே நேரத்தில் பக்தர்கள் முருகன் சிலை கண் திறந்து விட்டதாக கூறுவது தற்போது அவர்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பாக இருக்கும் நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments