ராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாகஅதிகாலை அம்மனுக்கு தனூர் பூஜை நடைபெற்ற பின்பு, நடராஜர் சுவாமிக்கு சிறப்பு பூஜைநடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட தேரில் முக்கிய வீதிகள் வழியாக நடராஜர் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதில் நாடார் உறவின்முறை டிரஸ்டிகள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0 Comments