சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் கருத்தான் கோனார் கருப்பாயி அம்மாள் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஏற்பாட்டில் கூட்டுறவு துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டாக பார்க்கப்படும் மாபெரும் தற்காப்பு கலை பயிற்சி முகாம் மூன்று நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து காஞ்சிபுரம் சேலம் கோவை புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த தற்காப்பு கலை தலைமை ஆசான்களும், பயிற்றுவிக்கும் பயிற்சியாளர்களும் வருகை புரிந்து தத்தமது திறமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக சிலம்பம் சுற்றுதல், அய்யங்கால் காலடி வரிசை, புலிக்கானம் வரிசை, துலுக்கான வரிசை, வாள் வீச்சு, வேல் கம்பு வீச்சு போன்ற பல்வேறு கலைகளை செய்து காட்டி அசத்தினர். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இக்கலைகளின் தலைமை ஆசான் சேவுக பாண்டியன் கலந்து கொண்டு பயிற்சிகளுக்குரிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கினார். தொடர்ந்து கலந்து கொண்டு அனைத்து நபர்களுக்கும் அறக்கட்டளை சார்பாக பரிவட்டம் கட்டப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இம்முகாமின் ஒருங்கிணைப்பு பணிகளில் பாலமுருகன், முத்துப்பாண்டி, ஆனந்தகுமார்,ராமபாலன்,முத்துமேனகா,செல்லத்துரை மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பெரியோர்கள்,ஆகியோர் ஈடுபட்டனர். நிறைவாக கலந்து கொண்ட அனைத்து பயிற்சியாளர்களும் தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளை மீட்டெடுத்து அதற்கு உறுதுணையாக இருக்கும் கூட்டுறவு துறை அமைச்சருக்கும்,அறக்கட்டளை நிறுவனருக்கும் தங்களின் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

0 Comments