திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேண்பாக்கம் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11-ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கஸ்தூரி தலைமை தாங்கினார்.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு சுமார் 359 11-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து சுமார் 1 கோடியை 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 வகுப்பறைகள்,2 ஆய்வுக்கூடம் கட்டிடத்தை எம் எல் ஏ துரை.சந்திரசேகர் நேரில் பார்வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார காங்கிரஸ் தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமையால், உறுப்பினர்கள் ஜாஸ்மின்,அர்ச்சனா, மல்லிகா,மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments