தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கோவில்பட்டி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது

 


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள கோவில்பட்டி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.    

செயற்குழு கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த ஒன்றியம், நகரம், பகுதி அளவில் ஆண் - பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் கபடி, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், மிதிவண்டி போட்டி என விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கியும், ஊராட்சிகள் வார்டுகள் அளவில் மகளிரை திரட்டி சாதி, மத, ஏற்றத்தாழ்வு பேதம் இல்லாத பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று பேசினாா். 

 கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்ஏ, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளர் சுசி. ரவீந்திரன், கோவில்பட்டி நகரமன்ற தலைவர் கருணாநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்  ராதா கிருஷ்ணன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில பொறியாளர் அணி இணைச் செயலாளர் அன்பழகன், கோவில்பட்டி கிழக்கு நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, என். ராதாகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், கருப்பசாமி, ஜெய கண்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, அன்பு ராஜன், இம்மானுவேல், பேரூர் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், கிருஷ்ணகுமார், சுரேஷ் கண்ணன், பாலகுமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments