காரைக்குடி சுற்றுப்புற பகுதிகளில் நடமாடும் உணவு பாதுகாப்புத்துறையினர் விற்பனை கடைகளில் ஆய்வு


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை நடமாடும் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர், இதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுற்றுப்புற பகுதிகளான சாக்கோட்டை, புதுவயல், கண்டனூர், கோட்டையூர், போன்ற பகுதிகளில் வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான தியாகராஜன் என்பவர் தலைமையில் இன்று நடமாடும் உணவு பாதுகாப்பு துறையினர் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்தனர், இதில் காலாவதியான உணவுப் பொருள்கள் உள்ளனவா என்றும், தற்போது உணவுப் பொருட்களை உட் கொள்ள முடியுமா? என்றும்  மேலும்உணவுப் பொருட்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். ஆய்வுக்குப் பின் தரமற்ற பொருட்கள் என தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments