பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு ஏழு ஆண்டுகளாக சென்னை கூட்டுறவு சங்கத்தால் கிடைக்க வேண்டிய ஓய்வு ஊதியத்தை தராமல் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு காலம் கடத்தி வருவதை கண்டித்து கோரிக்கை ஆர்ப்பாட்டம்


தமிழகம் முழுவதும்  பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகையினை பட்டுவாடு செய்யாமல் இருந்து வரும் ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கூட்டுறவு சங்கத்தையும் மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களையும் கண்டித்து AI BSNL PWA அமைப்பால் காரைக்குடியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் கடந்த ஏழு ஆண்டுகளாக மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வரும் சென்னை கூட்டுறவு சங்கத்தால் வஞ்சிக்கப்பட்ட பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வு  ஊதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை முழக்கங்களாக வைக்கப்பட்டது.

 இந்த கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார், மாநில உதவி தலைவர் முருகன் துவக்க உரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சாத்தையா, மனவழகன், பூபதி, செல்வராஜ், நோபில் ஆரோக்கியராஜ், ஆரோக்கியதாஸ், உறுமணன், மாரி, சுந்தரராஜன்,, ராமசாமி, துரைப்பாண்டியன், அமலநாதன், அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக கோரிக்கை உரை ஆற்றினார்கள்.



Post a Comment

0 Comments