சிவகங்கை மாவட்டம் , சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மித்ரா வயல் ஊராட்சியை சேர்ந்த ஆவணம் என்ற பகுதியில் நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களில் மாற்றுத்திறனாளிகள்,வயது முதிர்ந்தவர்கள் பலரும் வசித்து வரும் நிலையில்,நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகத்தின் சார்பில் தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது,இது பழுதடைந்த நிலையில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமம் பட்டுவருவதை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் முயற்சியில் ஈடுபட்டு வந்தநிலையில், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக சார்பில் மீண்டும் தார்சாலை புதுப்பிக்கும் பணியிணை மேற்க் கொள்ளும் நிலையில் , அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான பட்டா இடம் என்று தடுத்து வந்த நிலையில், பத்திரிகை செய்தியிட நம்மை அழைத்தனர், நாமும் அங்கு சென்ற நிலையில், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஆவணம் கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.
சம்பந்தப்பட்ட நபரை அழைத்து பேசிய ,சாலையை புதுப்பிக்க மறுத்து பேசிய நிலையில், சாக்கோட்டை காவல் ஆய்வாளர் சரவணன் சாலை புதுப்பிக்கும் ஆவணங்கள் முறையாக உள்ளதால் சாலை புதுப்பிப்பு செய்வதை தடுக்க கூடாது,மீறி தடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இல்லையெனில் நீதி மன்ற தடையானைப் பெற்று வரவும் அறிவுறுத்தினார், இது அறிந்த அந்த நபர் ஏற்றுக்கொண்டு சென்ற நிலையில், அங்கு கூடி நின்ற பொதுமக்கள், 40 ஆண்டு காலத்திற்கு பிறகு கிடைத்த வெற்றியாகும், இதைப் பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கும், ஒரு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரையும் கர ஓசம் எழுப்பி பாராட்டி சென்றனர்.


0 Comments