கமுதி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதர கோரி வார்டுகவுன்சிலர் நாளை உண்ணாவிரத போராட்டம்


 ராமநாதபுரம்  மாவட்டம் கமுதி தேர்வு நிலை பேரூராட்சியில்  15 வார்டுகள் உள்ளன.        சுமார் 30000 மக்கள் வசிக்கின்றனர்  தமிழகத்திலேயே போட்டியின்றி தொடர்ந்து தேர்வுசெய்யப்பட்டு வருகின்றபேரூராட்சி  கமுதி பேரூராட்சி  இதில் 4 வது வார்டு வாறுகால்களை மராமத்தும் செய்யவில்லை  விழுந்துபோன வாறுகாலுக்கு பதில் புதியதாக வாறுகால்கட்டவில்லை  சின்ன சின்ன மராமத்து பணிகள் கூட செய்யவில்லை இதேபோல் 8 வது வார்டுல் பல தெருக்களிலும் இதேநிலைதான் குறிப்பாக  பழய போஸ்ட்ஆபீஸ்தெரு  குளிமுத்துநாடார் தெருவில்  வாறுகாலை புதுப்பித்து அகலபடுத்தி கட்டவில்லை இதனால் பொதுமக்கள் சாக்கடை நீரிலேயேநடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது இதனால் டெங்கு மலேரியா போன்ற தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

  இதுபோல காமாட்சியம்மன் கோயில்தெரு ரோடு கிடப்பில் உள்ளது இதுபோல பேட்டைதெரு கிட்டங்கிதெரு அந்தோனியார் தெரு தெற்குமுதுகுளத்தூர் ரோடு முத்துநகர்  காளியம்மன் கோயில்தெரு  மற்றும் முஸ்லிம்பஜார் வெள்ளையாபுரம் சிங்கபுலியாபட்டி பகுதிகளில் வாறுகால்கள் அள்ளாமலும்  புதியதாக கட்டியவை 1 வருடம் ஆகியும் நிறைவுபெறாமல் உள்ளதால் கமுதி பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வாறுகால் குடிநீர் வசதியினை செய்துதர மறுக்கும் பேரூராட்சி தலைவரையும் செயல்அலுவலரையும் கண்டித்து  கமுதிபேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலர் மு.கனிமலர் பலமாதமாக மனுவழங்கியும் எதனையும் நிறைவேற்ற மறுப்பதால் கோரிக்கைகளை வலியுறுத்தி  13-1-2026 செவ்வாய்கிழமை காலை பேரூராட்சி  அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறார் இவருக்கு மேலும் நான்கு ஐந்து கவுன்சிலர்களும் ஆதரவுதந்து போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனத்தெரிகின்றது  செவ்வாய்கிழமை தான் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது  என்பது கூறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments