பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிரதோஷ வழிபாடு


தேனி மாவட்டம் பெரியகுளம்  கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/1/26    ஆங்கில புத்தாண்டு முதல் நாள் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும், திருமஞ்சனம், பால், தயிர் இளநீர், சந்தனம். பஞ்சாமிர்தம் தேன், பன்னீர் மற்றும் பல வகை மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்று அதன் பின்அலங்காரம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. 

உலக நன்மைக்காககூட்டு வழிபாடும் நடைபெற்றது. பல மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்  அன்ன பிரசாதம் கட்டளைதாரர்கள் பெரியகுளம் மீனாட்சி பைனான்ஸ்  சிங்கபெருமாள், தேனிஒர்க்ஸ் சாப் அசோக் ஆகியோர் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இந்தப் பிரதோஷ விழா ஏற்பாடுகளை  அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் செய்துருந்தனர்.





Post a Comment

0 Comments