மீஞ்சூரை அருகே அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இருந்து மேல்மருவத்தூருக்கு பயணம்


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு வருடா வருடம் மார்கழி மாதத்தில் காப்புக் கட்டி விரதம் இருந்து பெண்கள் குழுவாக  செல்வது வழக்கம்,அதன் அடிப்படையில் நேற்று அதற்கான நிகழ்ச்சி முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அறங்காவலர் குருசாமி வேலாயுதம் தலைமையில் அக் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து இடிமுடி கட்டிக் கொண்டு விஜயா தலைமையில் குழுவாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் வாகனத்தில் புறப்பட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அவர்களை திருக்கோவிலின் அறங்காவலர் வேலாயுதம் முத்துமாரியம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழி அனுப்பி வைத்தார்,இதில் திரளான கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments