தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம், தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் முனைவர். மகேஸ்வர் தயாள் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் மற்றும் தேனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு, மற்றும் காவல் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், சட்டம் ஒழுங்கை காப்பதில் போலீசார் கையாள வேண்டிய யுக்தி குறித்தும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

0 Comments