ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,வடமாடு மஞ்சுவிரட்டுக்கு தனித்தனியாக விதிமுறைகளை விதிக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்..... தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவை கோரிக்கை.......



சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு மஞ்சுவிரட்டு பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவற்றுக்கு தனித்தனி விதிமுறைகள் வகுத்து வெளி மஞ்சுவிரட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

பல கிராமங்களில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த மஞ்சுவிரட்டு, அரசாணையில் இடம்பெறாததால் தற்போது அழிந்து வருவதாகவும், அவற்றை ஆய்வு செய்து அரசாணையில் சேர்த்து தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டுக்கு மாவட்டத் தலைநகரங்களில் நிரந்தர அரங்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் சூர்யா சேதுபதி, செயலாளர் மனோஜ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments