கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி லயன்ஸ் சங்கம் சார்பில் மாணவ - மாணவிகளுக்கு புத்தாடை, கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், டயாலிஸ் கிட் வழங்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டி பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் சங்கத் தலைவர் எம்.முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் திருலோக்சந்தர், பொருளாளர் இனியசேகர், சங்க துணைத்தலைவர் காமராஜ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.மண்டலத் தலைவர் எம்.தயாளன், வட்டாரத் தலைவர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
3241 ஏ மாவட்ட ஆளுநர் பி.மணிசேகர், முதல் நிலை ஆளுநர் ஆர்.நரசிம்மன், முன்னாள் ஆளுநர் பி.வி. ரவீந்திரன், ஜிஎல்டி சுபஸ்ரீ பாலுசுப்பிரமணியம், மாவட்டத் தலைவர்கள் சந்தானம், லவக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாவை கேக் வெட்டி கொண்டாடி, மாணவ- மாணவிகளுக்கு புத்தாடை, கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றும் பொழுது, லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ஆண்டுதோறும் புத்தாண்டு மட்டுமல்லாமல் அனைத்து பண்டிகை காலங்களிலும் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் மட்டுமின்றி மருத்துவம் உள்ளிட்ட பல்வறு வகைகளில் பொதுமக்களுக்கு உதவி வருகின்றோம் என்றனர்.
இந்நிகழ்ச்சியில் சென்ட்ரல் கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் டிஎம்எஸ். மேகநாதன், லியோ சேகர், கும்மிடிப்பூண்டி சங்கத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர்கள் எஸ்கே. குமார், தசரதன், காரனோடை லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் ரவிக்குமார், கோபாலன், முன்னாள் தலைவர் விநாயகம், ரவிதாஸ், பொன்னேரி சங்க வட்டாரத் தலைவர் சுகுமார், மாவட்டத் தலைவர் பழனி, செயலாளர் பூமிநாதன், சென்ட்டினல் சோழவரம் மாவட்டத தலைவர் எத்திராஜ், சென்னை சோசியல் ஸ்டார்ஸ் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அன்சர் பாத்திமா, சங்க நிர்வாகி எம்.முகம்மது அபுபக்கர் உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
புதிய அலைகள் ஜெயப்பிரகாஷ் குழுவினர் சார்பில் குழந்தைகள் பாடிய இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.



0 Comments