திருப்பத்தூர் நேஷனல் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் திருவிழா


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லூரி மற்றும் அதன் சார்பு நிறுவனமான ஸ்ரீமுத்தையா மெமோரியல் அறக்கட்டளை சார்பாக மாபெரும் பாரம்பரிய பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கல்லூரி தாளாளர் வெளியாரி காசிநாதன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார்.. 

கல்லூரி முதல்வர்கள் சுரேஷ்பிரபாகர், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற சேர்மன் கோகிலா ராணி நாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.இவ்விழாவில் சிறப்புவிருந்தினராககூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மேளதாளம் முழங்க சிலம்பாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சியுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து  கனடா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த வெளிநாட்டவர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து மாணவ மாணவியர்கள் அமைத்திருந்த குடிசை வீடு, வயல், மந்தை, தேர் போன்ற பாரம்பரிய காட்சிப்படுத்திய நிகழ்வுகளை ஆச்சரியத்தோடு கண்டு களித்து கல்லூரி மாணவர்களோடு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். நடைபெற்ற இவ்விழாவில் சிறப்புஅழைப்பாளர்களாகஆ.பி.சீ.அம்மாள்கல்வியல் கல்லூரி தாளாளர் ராமேஸ்வரன், திருப்பத்தூர் வட்டாச்சியர் மாணிக்க வாசகம், சமூக வலைத்தள பிரபலம் ராஜ்பிரியன், கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் ஒருங்கிணைப்பு பணிகளில் கல்லூரி முதல்வர் ஹேமமாலினி செல்வி ஆதிரா ஆசிரியர்கள் சிவநேசன், சதக்துல்லா ,சுரேஷ் சதாம், பூவிழி,சாந்தி, அனிதா ஆகியோர் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments