தூத்துக்குடி பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் தமிழ்நாடு மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபிராமிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச்செயலாளர் விஜயகுமாா், துணை தலைவர் ராஜேஷ், துைண செயலாளர் ஜெபசிங், ஆகியோா் முன்னிலை வகித்தனா். அகில இந்திய தலைவா் காளிதாசன் விளக்கவுரையாற்றினாா். மாநில மகளிா் அணி அமைப்பாளா் கலா வரவேற்புரையாற்றினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிறிய பரிசோதனைக் கூடங்கள் நடத்துவதற்கு தற்போது வெளியிட்டுள்ள அரசாணை 390 ரத்து கிராமப் பகுதிகளில் 100 சதுர அடி எனவும் நகர்ப்புறங்களில் 150 சதுர அடி எனவும் அரசாணை வெளியிட தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தல், மருத்துவக் கழிவு கட்டணம் தமிழகம் முழுவதும் ஒரே கட்டணமாக ரூபாய் 1000 எனவும் உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மூலம் அரசு எடுத்து நடத்த வேண்டும், அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும்போது என்னென்ன சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிக்கையாக வெளியிட வேண்டும், மாநில அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், மருந்து கடைகளில் இரத்த பரிசோதனை செய்வதை தடை செய்ய வேண்டும், மத்திய அரசு ஆய்வு கூடங்களுக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளதை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசு ஆய்வக நுட்புனர்களுக்கு கொண்டு வந்துள்ள யுஹெச்ஐடியை சங்கம் ஆதரிக்கின்றது.
அதே வேளையில் கல்வி தகுதியை வைத்து ஆய்வக உரிமையாளர்களை வெளியேற்ற நினைப்பதை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. சிறிய பரிசோதனை கூடங்களை நசுக்கும் நோக்கில் மருத்துவரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், ஆய்வுக்கூடங்களை பதிவு செய்ய ரூ 5000 என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது கடந்த மார்ச் அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பதிவு கட்டணம் ரூ1000 ஆக குறைக்கப்படும் என்று அமைச்சர் வாய்மொழியாக அறிவித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள அலை டு ஹெல்த் கவுன்சிலில் பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கமாகிய எங்களுக்கு நிரந்தர உறுப்பினராக அங்கீகரிக்க வேண்டும். ஆய்வக நுட்பனர்களுக்கான சீருடை வெள்ளை நிற கோர்ட் சீருடையாக அறிவிக்க வேண்டும் இதை மருத்துவத்துறை சார்ந்தவர்கள் மட்டுமே அணிய அரசாணை வெளியிட வேண்டும். ஆய்வக நுட்புனர்களுக்கு தனியாக நலவாரியம் அமைத்து தர வேண்டும். தமிழக அரசுத்துறையில் உள்ள ஆய்வக நுட்பனர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்பனர்களை கொண்டு பரிசோதனை செய்யும் வேலைகளை தவிர மற்ற வேலைகளிலும் டேட்டா என்ட்ாி பயன்படுத்துகிறார்கள் அதை தவிர்க்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றக்கூடிய ஆய்வக நுட்பனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வரும் ஆண்டுகளில் ஆன்லைனில் உறுப்பினர் அட்டை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அனைத்து ஆய்வுக்கூடங்களுக்கு சிஇஏ பதிவு செய்த அனைவருக்கும் உடனடியாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற மார்ச் 13 அன்று 27 வது ஆண்டு ஆய்வக நுட்பனர்கள் தினம் தமிழ்நாடு முழுவதும் நமது சங்க உறுப்பினர்கள், அனைத்து மாவட்டம் தோறும் சங்க கொடியேற்றி, இனிப்பு வழங்கி, இலவச முகாம்களை நடத்த வேண்டும். அதே போல் விளையாட்டுப் போட்டிகள் கிரிக்கெட், ரிங்பால், கேரம், செஸ், செட்டில் கார்க் போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்படுவது, ஆய்வக நுட்பனர்களின் உரிமையை காக்க 2026 பிப்ரவரி 15 அன்று மாநிலம் தழுவிய உண்ணா விரதப்போராட்டம் சென்னையில் நடத்தப்படும். புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், அதன்படி மாநிலத் தலைவர் தியாகராஜன் மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் மாநில பொருளாளர் ஆறுமுகம் அகில இந்திய துணைத்தலைவர் துரைசாமி மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சம்பத்குமாா் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக, மாநில துணை செயலாளர்களாக பாலாஜி கோபி சதீஷ் ஜெதீஸ்வரன். சுந்தர் சிவகுமார் ஆகியோர் மாநில நிர்வாக குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனா். என்ஏபிஎல்சிஇஓ வாக இருந்த வெங்கடேஸ்வரன் மாநிலத்தில் உள்ள சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை காப்பாற்றும் வகையில் எண்ணற்ற உதவிகள் புரிந்து என் ஏ பி சிக்கு சிஇஓ வாக பதவி உயர்வு பெற்று சென்றுள்ளதற்கும்.
சிஎம்சி இக்யூஏஎஸ் கோஆா்டினேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் பமிலா கிறிஸ்துதாஸ்க்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் நமது சங்கம் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில குழுவிற்கு வருகை தந்த மாநில நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்ட செயலாளர் மைக்கேல் பிரதீப் நன்றியுரையாற்றினாா்.

0 Comments