உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனம்..... லட்சகணக்கான பக்தர்கள் வழிபாடு


தமிழ்நாட்டில் எத்தனையோ சிவத்தலங்கள் இருந்தாலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தனித்துவமானது. இங்குள்ள நடராஜர் சிலையும், அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் அபூர்வமானது உலகிலேயே பெரிய மரகதத் திருமேனி இங்குள்ள நடராஜர் சிலை சுமார் 5.5 அடி உயரம் கொண்டது. இது விலைமதிப்பற்ற, தூய பச்சை மரகதக் கல்லால் ஆனது. உலகில் இவ்வளவு பெரிய மரகதச் சிலை வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 364 நாட்கள் சந்தனக் காப்பு மரகதம் ஒரு மென்மையான கல். இது ஒளி, ஒலி மற்றும் காற்று ஆகியவற்றின் அதிர்வுகளால் விரிசல் அடைய வாய்ப்புள்ளது. இந்தச் சிலையைப் பாதுகாப்பதற்காகவே ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டிருக்கும். மேள தாளங்கள் கூட இந்தச் சிலைக்கு அருகில் பலமாக இசைக்கப்படாது.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனத்தன்று இன்று காலை சந்தனம் களையப்படும். அன்று ஒரு நாள் மட்டுமே சிலையைப் பச்சை நிற மரகத மேனியில்  பக்தர்கள் தரிசிக்க முடியும்.அப்போது சிலையின் மீது சூரிய ஒளி படும்போது, சிலை உயிர்ப்புடன் இருப்பது போன்ற பிரம்மையை  நமக்கு ஏற்படுத்தும்.

 மிகவும் நுணுக்கமாக கவனித்தால், சிலையின் உடலில் மனிதர்களுக்கு இருப்பது போன்ற நரம்புகள் தெரிவதை இன்றும் நாம் காணலாம். இதுதான் இந்தச் சிலையின் மிகப்பெரிய அதிசயம்!

மரகத சிலையின் மீது   இருபத்தி நான்குக்கும் மேற்பட்டபொருட்களால் அபிஷேகம் செய்யப்படும்  போது, அந்தப் புனித நீர் மற்றும் சந்தனம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருந்தாகக் கருதப்படுகிறது. குறிப்பாக சிலையிலிருந்து எடுக்கப்படும் அந்தப் பழைய சந்தனம் பக்தர்களுக்குப் பெரும் பிரசாதமாக. இன்றும் வழங்கப்படுகிறது. 

காலத்தால் முந்தைய தலமமண் தோன்றிய போதே மங்கை தோன்றியது என்பது இக்கோவிலின் பழமையைச் சொல்லும் வாசகம். அதாவது பூமி உருவான காலத்திலிருந்தே இந்தத் தலம் இருப்பதாக நம்பப்படுகிறது. இராவணன் இந்த ஈசனை வழிபட்டுத்தான் தனதுவரங்களைப் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. இன்று முழுவதும் நடராஜரை காண லட்சக்கணக்  காணோர் தரிசனம் செய்ய கூடியிருப்பதால்   போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments