திருப்பத்தூர் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழக வேந்தர் பங்கேற்பு...... கல்வியோடு கூடிய விளையாட்டு உயர் பதவிகளை வகிக்க வழிவகுக்கும் என பேச்சு......


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 30ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது .சேது பாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேது குமணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வேந்தர் மூர்த்தி, இந்திய ராணுவ வீரர் சத்தியமூர்த்தி, வனச்சரக அலுவலர் பிரவீன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றி உலக ஒற்றுமைக்காக சமாதான புறாக்களை பறக்கவிட்டு விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தனர்.

 அப்போது மாணவர்கள் மத்தியில்  வேந்தர் மூர்த்தி பேசுகையில்  கல்வியோடு கூடிய விளையாட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர்,  போன்ற உயர் பதவிகளை வகிக்க வழிவகுக்கும். மேலும் விளையாட்டு என்பது ஒரு மருத்துவம் எனவே அதில் நீங்கள் வருவது வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றாகும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரேசாரியோ பிரின்ஸ்  மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments