தேவகோட்டை: அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய அரசின் சாதனைகள் மற்றும் பிரச்சார தெருமுனை கூட்டம்


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம்,தேவகோட்டை ராம் நகர் பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சாதனைகள் விளக்கம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்ட நிகழ்வில் மாநிலசெயற்குழு உறுப்பினர் நாகராஜன்,மாநில ஆன்மீக பொதுச்செயலாளர் கார்த்திகேயனி,கண்ணங்குடி ஒன்றிய பாஜக பெரியசாமி அவர்கள்,நகர பாஜக தலைவர் காசிராஜா,நகர பொதுச்செயலாளர் விஜயா ,கீழ குடியிருப்பு ஆசை பாஜக உறுப்பினர்,மற்றும் மாவட்ட நகர பாஜக உறுப்பினர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்,மேலும் பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுக உறுப்பினர்கள்,நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பு செய்தனர்.

Post a Comment

0 Comments