தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமையில், தேனி தெற்கு ஒன்றியம் வீரபாண்டி பேரூர் வார்டு மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் இரத்தினசபாபதி, வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், பேரூராட்சி சேர்மன் கீதாசசி மாவட்ட துணைச் செயலாளர் திருக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.
தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆஜிப்கான் மற்றும் துணை அமைப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில், வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மார்த்தாண்டம் மற்றும் துணை அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இந்த கூட்டத்தில், வார்டு மற்றும் பாக இளைஞரணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். உடன், வீரபாண்டி பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

0 Comments