சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே செவ்வூரில் உள்ள அருணோதயா வித்யாமந்திர் பதின்ம மேல்நிலைபள்ளி(ஏ.வி.எம்) வளாகத்தில் கிராமத்தைப் போல அமைத்து பாரம்பரிய பொங்கல் விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளி ஆண்டுதோறும் கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன முறையில் ஆய்வுக்கூடங்கள் அமைத்தல் விண்வெளிக்கு விண்கலம் ஏவுதல், புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தல் மாணவர்களை ஊக்குவித்தல், போன்ற பல்வேறு பயனுள்ள நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆண்டுதோறும் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் அடைந்து வருவதோடு தற்சமயம் பல்வேறு உயர் பதவிகளிலும் பயின்ற மாணவர்கள் வகித்து வருகின்றனர். இப்படி மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு திகழும் இப்பள்ளியில் மின்சாரம் தொலைபேசி நவீன சாதனங்கள் இல்லாத பண்டைய கால தமிழர்களின் அன்றைய கால வாழ்க்கை முறையை இன்றைய கால தலைமுறைக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்த ஆண்டு பாரம்பரியமிக்க பொங்கல் விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. இதற்காக பள்ளி வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆசிரியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பறையாட்டம், சிலம்பம், கரகம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்தனர். தொடர்ந்து குடில்கள், விவசாய கருவிகள், மாட்டுவண்டி, கிணறு, ஜல்லிக்கட்டு காளைகள், பஞ்சாயத்து அமைவிடங்கள், பழைய காலத்து டீக்கடைகள், போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டு பழைய கிராம வாழ்க்கை நினைவுகளுக்கே செல்லும் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும் தமிழர்களின் பாரம்பரியமிக்க நொண்டி, பல்லாங்குழி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற கிராம விளையாட்டுகளும், மறந்து போன தின்பண்டங்களும் வழங்கப்பட்டன. இந்த விழா மூலம் இன்றைய இளைய தலைமுறைக்கு கிராம வாழ்க்கை, விவசாயம், பண்பாடு நேரடியாக அறிமுகப்படுத்தப்பட்டதாக அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களும், விழாவை பார்ப்பதற்காகவே சுற்றுப்புற பல்வேறு கிராமங்களில் இருந்து குடும்ப குடும்பமாக வருகை தந்து பொங்கல் விழாவில் ஆர்வமுடன் கலந்து ஆடி பாடி மகிழ்ந்து கொண்டனர். மேலும் இன்றைய ஒரு நாள் எங்களை கவலைகளில் மறந்து எங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடினால் கூட இப்படிபட்ட மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்க வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்ட ஒரு தருணத்தை தந்த பள்ளி நிர்வாகத்திற்கு எங்களுடைய நன்றியையும் பாராட்டுகளையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறிச் சென்றனர்.இவ்விழாவிற்கான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளிலும் பள்ளியின் தாளாளர் செல்வின் அன்பரசு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஈடுபட்டனர்.



0 Comments