தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 திட்டம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ஆகியவற்றை வழங்கி துவக்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
தமிழக முதல்வா் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்து 47 ஆயிரத்து 1 குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் 168 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகள் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வகிக்கும் குடும்பத்தாரா்களுக்கும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர் அதேபோன்று சுமார் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டு 10 லட்சம் பேருக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டு உள்ளது இந்த கணினி ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய மடிக்கடிணியாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தமிழ்நாட்டில் 5 ஆண்டுகாலமாக மழை மும்மாாி பொழிந்து கொண்டிருக்கிறது தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா வகையிலும் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. என்று மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறோம் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள்நல்ல முறையில் பயனடைந்து வருகிறாா்கள். மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை. சமூகநலத்துறையில் 4ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக ஆளுநாிடம் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளாா். எனக்கு என்ன கணக்கு என்று தொியவில்லை எதிா்கட்சியின் டாா்க்கெட் இதுதான் பாஜகவின் டாா்க்கெட் இதுதான் தோ்தலுக்கு முன்பு அமைச்சா்கள் மீது குற்றச்சாட்டு சொல்லவேண்டும். சட்டம் ஓழுங்கு சீர்கேடு என்று சொல்லவேண்டும். அதுதான் டாா்க்கெட் அதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறாா்கள் தமிழக மக்கள் இதனை அறிவாா்கள் எந்த துறையிலும் ஊழல் நடைபெறவில்லை.
வௌிப்படையான ஓரு நிா்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. வாய்புளிச்சதோ மாங்காய் புளிச்சதோ என்று பேசுகிறாா்கள். மக்கள் யாரும் நம்ப மாட்டாா்கள். மக்கள் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகி விட்டாா்கள். தமிழ்நாடு வளா்ச்சியடைந்து வருகிறது. மத்திய அரசு தமிழகம் வளர்ச்சி யடைந்துவிட்டது என்று எதற்கு நிதி என்று நமக்கு தரக்கூடிய மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்க கூடிய கல்விநிதி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் நிதியை தராமல் நமது மக்களை வஞ்சித்து வருகிறது. என்று பேட்டியின் போது அமைச்சர் கீதாஜீவன் கூறினாா்.

0 Comments