தவெக பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்த சிபிஐ...... ஓட்டுனரிடம் தீவிர விசாரணை

 


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் கரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட பிரச்சார நிகழ்ச்சியின் போது திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ வசம்  ஒப்படைத்த நிலையில் ஏற்கனவே தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் டெல்லியில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நடிகர் விஜய்க்கும் இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜயின் பிரச்சார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நடிகர் விஜயின் பிரச்சார வாகனம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு ஏற்கனவே சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சனை இருக்கும் நிலையில் தற்போது கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments