சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசு


இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தாண்டுப் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை, சிலேட், பேனா, பென்சில், ஸ்கேல், ஷார்ப்னர், குச்சி போன்றவைகள் அடங்கிய தொகுப்பு சண்முககுமாரபுரம் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் பேரவையின் சார்பில் வழங்கப்பட்டது.

பரிசுப் பொருட்களை சென்னையில் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணிபுரியும் சண்முககுமாரபுரம் மண்ணின் மைந்தர் வி.இராஜபாண்டி கவிதா குடும்பத்தார் வழங்கினர். பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவேந்திர குல வேளாளர் இளைஞர் பேரவைத் தலைவர் இரா.ரவி அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

விழாவில் தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், இடைநிலை ஆசிரியை அ.தாஹிரா, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments