தேனி மாவட்டத்தில் தொன்மையை பறைசாற்றும் தமுஎகச தொல் மரபு பயணம்...... எழுத்தாளர்கள், கலைஞர்கள் பேரார்வத்துடன் கலந்து கொண்டனர்.......


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தேனி வட்டார கிளை சார்பாக தொல் மரபு பயணம்  உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் துவங்கியது.   தமுஎகச தேனி மாவட்டச் செயலாளர்  காமுத்துரை இந்த பயணத்தை துவக்கி வைத்தார். அங்கு கோயில் வரலாறு கல்வெட்டு செய்திகள் சிற்பக்கலை கட்டிடக்கலைகள் பற்றி தொல்லியல் ஆய்வாளர் மாணிக்கராஜ் வகுப்பு எடுத்தார். பின்னர்,   தேநீருடன் உரையாடல், அதன் பின்னர்  சமணப் பள்ளி சென்று அங்கிருந்த சமண சிற்பங்களின் வரலாறு கல்வெட்டு செய்திகள்  பற்றிய தகவல்கள் சொல்லப்பட்டு பயணம் நிறைவு பெற்றது.

மாவட்ட தலைவர் ராஜிலா ரிஜ்வான், இதயநிலவன், மாநிலக் குழு உறுப்பினர்கள் சிவாஜி மற்றும் தெய்வேந்திரன், சி பிஏ கல்லூரி பேராசிரியர்கள், வரலாறு துறை மாணவர்கள், அறம் கிளை தோழர்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். தொன்மையான மரபுகள் மற்றும் சிற்பங்கள் குறித்து அனைவரும் இந்த தொல்மரபு பயணத்தின் மூலம் அறிந்து தெளிந்து உவகை கொண்டிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த பயண நிகழ்வின் நிறைவாக மாவட்ட பொருளாளர் அருண் அழகு நன்றி தெரிவித்தார். 

செய்தியாளர்: மு.அழகர்.




Post a Comment

0 Comments