திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இயங்கி வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது மூத்த வழக்கறிஞர் ஐசக் சாமுவேல் தலைமையில் இதற்கான பதவி ஏற்பு நிகழ்ச்சி பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் அமரகவி,பொது செயலாளர் விஜயகுமார்,பொருளாளர்தேவராஜ்,துணை தலைவர்கள் மதிவாணன்,தங்கதேவன்,கணபதி, இணைச் செயலாளர்கள் கதிர்வேல்,தங்கராஜ் நரேஷ்,துணை செயலாளர்கள் ஏசு,அருண் ஜோதி,ராஜேஷ்,விளையாட்டு துறை செயலாளர்கள் உமாநாத், ராஜேஷ்,சுரேஷ்,நூலகர் மதன்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சால்வை அணிவித்து மூத்த வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்த பின் மாலை மரியாதைகள் பட்டாசுகள் முழங்க மேளதாளத்துடன் ஊர்வலமாக அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு சென்று சென்றுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்ற வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.



0 Comments