தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியில், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக நிழல் தரும் வேப்பர மரக்கன்றுகள், ஆடாதோடை மரக் கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் கொள்முதல் செய்யப்பட்டன.
இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து விவசாயிகளுக்கு வழங்காத காரணத்தால், மரக்கன்றுகள் வெயிலில் காய்ந்து சருகாக மாறியுள்ளன. மக்களின் வரிப்பணத்தில் மரக்கன்றுகள் வாங்கி, அதனை முறையாக பராமரித்து விவசாயிகளுக்கு வழங்காததால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை உரிய வகையில் விநியோகம் செய்யாமல் சருகாக மாறியுள்ள மரக்கன்றுகள் மற்றும் மரக்கன்று தொட்டிகளை, அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் குப்பை போல் குவித்து வைத்திருப்பது விவசாயிகள் மத்தியில் குமுறலை ஏற்படுத்தியுள்ளது.



0 Comments