சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறும் காரைக்குடி மண்டலத்திற்கான கலந்தாய்வு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்பாக அவர் தங்கி உள்ள தங்கும் விடுதியில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
அரசு ஊழியர் சங்கங்கள் வலுவான அமைப்பாக உள்ளது. அவர்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வலுவான எதிர்ப்பாக அமையும் என்பதால் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ., அரசை பொறுத்தவரை எந்த பெருமையும் தமிழனுக்கு இருக்க கூடாது என்ற நினைப்புதான் உள்ளது. தமிழன் மட்டுமே பழம் பெருமை வாய்ந்தவன். அவன் பெருமையை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.கருத்துக்கணிப்பில் நான் கவனம் செலுத்துவதில்லை. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கருத்து என்பது எடுப்பவர்களின் கருத்துத்தான். தேர்தல் அறிக்கை நாங்கள் கொடுப்பதில்லை. ஆட்சி நடத்துவது குறித்த செயல்பாட்டு அறிக்கை மட்டுமே கொடுப்போம். ஊழலற்ற, பசியற்ற, பாலியல் வன்கொடுமை, சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத புதிய நாட்டை நாங்கள் படைக்க வேண்டும் என எண்ணுகிறோம். அது முடியுமா? என்றால் முடியும்.
போதை பொருள் கலாச்சாரம் பெருகியதற்கு வட மாநிலத்தவர்களின் வருகையும் ஒரு காரணம். வன்முறையை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. யாரையும் தாக்கி அடித்துவிரட்டுவது நம் நோக்கம் இல்லை. வட இந்தியர்களின் வருகை தமிழ் இனத்திற்கு ஒரு இழுக்கு. இந்த நாட்டின் அதிகாரம் இந்தி பேசுவபவர்கள் கையில் சென்று விடும். எல்லா இடத்திலும் வட இந்தியவர்கள் வந்து விட்டனர்.தவிர்க்க முடியாத வேலையை அவர்களிடம் கொடுக்க வேண்டியுள்ளது. நுட்பமான வேலைப்பாட்டை அழித்து விட்டனர். வட இந்தியரின் வருகை நாட்டின் அதிகாரம், அரசியலில் புகுந்து விடும். 10 ஆண்டில் வட இந்தியரின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் முழுமையாக இருக்கும். திராவிட அரசு இதை தடுக்காது. எல்லா வேலைக்கும் வட மாநிலத்தவர்கள் வந்து விட்டனர். சும்மா இரு சம்பளம் தருகிறேன் என்ற நிலைப்பாட்டில்தான் தமிழ்நாட்டில் நூறுநாள் திட்டம் உள்ளது. இது ஓட்டை பிரிக்கும் வேலை. உழைக்கும் திறனற்றவர்களாக தமிழர்கள் மாறி விட்டனர். குடி, எல்லாம் இலவசம் என்றாகி விட்டது. இது பேராபத்து.
அரசே மது விற்கும்போது அரசு மருத்துவமனையில் மது குடித்தது பெரிய விஷயம் இல்லை. நடவடிக்கை எடுத்தால் வியாபாரம் குறையும். அரசு அங்கீகரித்து மது விற்று, நடவடிக்கை எடுக்க முடியுமா? குடித்து விட்டு போதையில் போட்டு விட்டு சென்று வி்டடனர். சுத்தம் செய்திருந்தால் இது தெரியாது.
ஆட்சியில் பங்கு என்பதை விஜய் வைத்துள்ளார். பல மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி என்பது உள்ளது. அதில் எந்த தவறும் இல்லை. அது வரவேற்கத்தக்கது. காரைக்குடி தொகுதியில் வேட்பாளரை கடைசியில் அறிவிப்போம். காரைக்குடி மட்டும் சொந்த மண் அல்ல. தமிழ்நாடே எனக்கு சொந்த மண்தான். நான் ஒரு ஊர்க்காரன் மட்டுமல்ல. நான் கடல் என்னை ஒரு குட்டையாக குளமாக மாற்ற முடியாது. பிப்.21-ம் தேதி மொத்த வேட்பாளர்களையும் அறிவிப்பேன். பிப்.21-ல் திருச்சி மாநாட்டில் எல்லா வேட்பாளரையும் அறிவிப்போம். எங்களின் ஒரே கொள்ளை தமிழ்மொழி. உலகின் எல்லா மொழியும் விருப்ப மொழி. 36 லட்சம் வாக்கையும் காசு கொடுக்காமல் வாங்கியுள்ளேன். காசு கொடுக்கும்போது ஊழல் அங்கே வந்துவிடுகிறது.
நாங்கள் எடுத்து வைக்கிற கருத்தைத்தான் பார்க்க வேண்டும். அதை விட்டு சாதி, மதத்தை பார்க்க கூடாது. சாதியில் நின்ற சாதித்த ஒருவரை சொல்ல முடியுமா? திரும்பி திரும்பி திராவிட கட்சியில் சென்று வெல்வதில் என்ன இருக்கிறது. கூட்டணி வைத்த கட்சிகள் சாதித்தது இல்லை. கூட்டணியில் இல்லாமல் பெற்ற ராமதாஸ், விஜயகாந்த் பெற்ற வாக்குகள்தான் அவர்கள் பெற்ற வாக்குகள்.
போதை விற்பனையே அதிகாரம், காவல்துறைக்கு தெரிந்துதான் நடக்கிறது. என்னிடம் அதிகாரம் வந்தால் விற்று காட்டமுடியுமா? காமராஜர் காலத்தில் சாராயம் விற்பனை இல்லை. எத்தனை பேர் கள்ளசாராயத்தினால் செத்தார்கள். தமிழகத்தில் தலைவரே சாராயம் விற்றால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.தமிழக முதல்வர் திராவிட பொங்கல், தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் மோடி பொங்கல் என கூறி வருகின்றனர் என கேள்வி எழுப்பிய போது, தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதற்கான குறியீடு என பதிலளித்தார்.

0 Comments