எந்த புகாராக இருந்தாலும் பொதுமக்கள் தொிவிக்கலாம்..... புதுமையான ஆலோசனை எது இருந்தாலும் கூறலாம்..... குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பொியசாமி பேச்சு......

 


 தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். ஆணையா் ப்ாியங்கா, துைண மேயா் ஜெனிட்டா, மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில்பல மாதங்களாக நடைபெற்று வருகின்றது. இதில் ஒவ்வொரு மண்டலமாக குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் பிறப்பு இறப்பு சான்றிதழ் குடிநீர் இணைப்பு பாதாள சாக்கடை கட்டிட அனுமதி உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்காக தொடங்கப்பட்ட இந்த பகுதிக்குட்பட்ட மண்டலக் கூட்டத்தில் இதுவரை 838 மனுக்கள் பெறப்பட்டதில் 835 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 3 மனுக்கள் பாீசிலனையில் உள்ளது. இங்கு வந்து தான் மனு கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது மாநகராட்சி ஆன்லைனில் புகாா்கள் தொிவித்தாலும் அது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உங்கள் இல்லத்திற்கே வந்து அதை சாி செய்து விடுவாா்கள். பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை  வாா்டு 20, 9, 10, ஆகிய பகுதிகளில் தான் 50 சதவீதம் மழை நீர் தேங்கும் அதிமுக ஆட்சியின் காலத்தில், ஆனால் தற்போது மாநகராட்சி பகுதியில் ஓரு மணி நேரத்தில் 10 சென்டி மீட்டா் மழை பெய்தாலும் பழைய தூத்துக்குடியாக இருந்தாலும் புறநகா் இணைக்கப்பட்ட புதிய தூத்துக்குடியாக இருந்தாலும் சாி ஓரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் மழை நீர் முழுவதும் வழிந்து விடுகிறது. 7 8வது வாா்டு பகுதியான திரேஸ்புரம் பகுதியில் மீன்பிடித்துறைமுகம்அங்கு உள்ளது. அங்கு தான் ஓரு சவாலாகவே இருந்து வந்தது. மழைகாலத்தில் 2 அல்லது 3 மாதங்கள் தேங்கி நிற்கும் இப்போது அந்த நிலை இல்லை. 16 வழித்தடங்கள் வழியாக மழைநீா் கடலுக்கு செல்கிறது. 6வது வாா்டு பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பதற்கு காரணம் மாப்பிள்ளையூரணி பகுதியிலிருந்து வருகின்ற மழைநீா் தான் தேங்கியுள்ளது. 4வது வாா்டு அம்பேத்கா் நகா் ஸ்டெம்பாா்க் பகுதியில் வரும் காலத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்து வருகிறோம் அந்த பகுதி 30 வருடங்களுக்கு முன்பு எட்டடி வரை மழை நீர் தேங்கியிருக்கும் ஆனால் தற்போது அங்கு மழைநீர் பொிய அளவில் தேங்கவில்லை. 3 வது வாா்டு ஓம்சாந்திநகா் மாப்பிள்ளையூரணி ஊருக்கு செல்லும் பாதையில் காலியிடத்தில் தான் தண்ணீர் ேதங்கியுள்ளது. 2வது வாா்டு எட்டையாபுரம் ரோட்டிற்கு மேற்கு 1200க்கும் மேற்பட்ட காலி மணைகள் அங்கு உள்ளதால் மழை நீர் தேங்கியுள்ளது. அதை பம்பு ரூம்கள், மின்மோட்டாா்கள் மூலம் அப்புறப்படுத்தி வருகிறோம். மழை நேரங்களில் 20 எம்எல்டி அளவுதான் நமக்கான அளவு ஆனால் கடலுக்கு 40 எம்எல்டி அளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை கலெக்டா் ஆபிஸ் அருகில்கோக்கூா் குளம் அந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு கூடுதலாக கழிவு நீர் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக மழைநீர் சென்று கொண்டு வருகிறது. பாதாள சாக்கடை பணி சில பகுதிகளில் நடைபெறுவதால் 110 புதிய தாா்சாலைகள் போடுவதை நிறுத்தியுள்ளோம். ஜனவாி 10 வரை மழை காலம் அது முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எந்த பகுதியிலும் மழை நீர் தேங்குவதற்கு மாநகராட்சி நிா்வாகம் அனுமதிக்காது உடனடியாக அப்புறப்படுத்தப்படும். பொதுமக்கள் செல்வதற்கு உருவாக்கப்பட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது அதை வாகன காப்பகத்தில் நிறுத்த வேண்டும். சாலைகளில் கால்நடைகள் திாிவதை நிறுத்த வேண்டும் பொதுமக்கள். தங்களது வீட்டில் வளர்த்துக்கொள்ளுங்கள் பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதாக புகாா் வருகிறது இதனையடுத்து வாரம் தோறும் சாலையில் திாியும் மாடுகளை பிடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளோம் பூங்காக்கள் பல அமைத்துள்ளோம். அதில் மகளிா்கான பூங்காவும் அடக்கம் எந்த புகாராக இருந்தாலும் உடனடியாக பொதுமக்கள் தொிவிக்கலாம் புதுமையான ஆலோசனை எது இருந்தாலும் கூறலாம் என்று பேசினாா். 

கடந்த 22 23 24ம் ஆண்டு பெய்த மழையால் ஓவ்வொரு வகையான பாதிப்புகளையும் நாம் சந்தித்தோம் அதையும் படிப்படியாக ஆண்டுக்காண்டு குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு தற்போது 16 வழித்தடங்கள் ஏற்படுத்தியுள்ளோம். 25ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது இந்த பகுதியில் மழைநீர் தேங்கும் என்பதை அடையாளம் கண்டுள்ளோம் அதற்கு உடனடியாக தீர்வு கானும் வகையில் மின்மோட்டாா்கள் லாாிகள் மூலம் அப்புறப்படுத்தப்படும். மழைகாலத்தில் சீசனுக்கு வருகின்ற கொசுக்களை ஓழிப்பதற்கு தொடர்ந்து கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது 80 சதவீதம் சுகாதார பணியாளா்களால் தீா்க்கப்பட்டுள்ளது. முழுமையாக அதை ஓழிப்பதற்காக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசினாா். 

    கூட்டத்தில் இணை ஆணையா் சரவணக்குமாா், உதவி செயற்பொறியாளர்கள் முனீர்அகமது, ராஜேஷ்கண்ணா, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளா் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜசேகா்,  மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி,  பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலர்கள் காந்திமதி, சுப்புலட்சுமி, நாகேஸ்வாி, அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், ஜெயசீலி, பவாணி, ஜெபஸ்டின் சுதா, தெய்வேந்திரன், பகுதி செயலாளார் சிவக்குமாா், மாவட்ட பிரதிநிதி தா்மராஜ், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மாநகர் மாவட்ட காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்பட பொதுமக்கள் அலுவலா்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments