அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெயங்கொண்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம்


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகரத் தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். உண்ணாவிரத போராட்டத்தை மனோகரன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை நிலைய பேச்சாளர் மோகன்தாஸ் கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும் நோக்கோடு அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கிய மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து அகிம்சை வழியில் 50-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்தை மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன் முடித்து வைத்தார்.உண்ணாவிரத போராட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.



Post a Comment

0 Comments