ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தொட்டியபட்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 267-வதுபிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னதாக கிராமத்தின் மத்தியில் சமுதாய கொடி ஏற்றப்பட்டு,வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று,மீண்டும் சிலைக்கு அருகே வந்து மரியாதை செலுத்தினர்.ஊர்வலத்தின் முன்பு டிரம்செட்,மேளதாளம் வான வேடிக்கையுடன் ஏராளமான இளைஞர்கள் ஆரவாரத்துடன் சென்றனர்.இதில் 500 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தொட்டியபட்டி கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்

0 Comments