இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகள் முத்துமாரி (வயது45) என்பவர் கண்பார்வை முழுவதும் தெரியாத மாற்றுத்திறனாளி இவர் திருமண ஆகாத நிலையில் கே.நெடுங்குளம் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த குமரய்யா மகன் மூக்கையா (வயது 65) கடந்த பத்து நாட்களுக்கு முன்பிலிருந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பொறுமை இழந்த மாற்றுத்திறனாளி முத்துமாரி என்பவர் செவ்வாய்க்கிழமை அன்று கமுதி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா குழு சார்பில் ஸ்டாலின் கூறியதாவது.
கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரி என்ற கண் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மூக்கையா என்பவரை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், மூக்கையா என்பவர் மீது பாலியல் குற்ற பிரிவின் கீழ் மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாற்றுத்திறனாளி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.

0 Comments