இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் கமுதி அருகே கீழகொடுமலூர் என்னும் ஊரில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர். இம்முகாமில் கால்நடை மருத்துவர்கள் பங்கேற்று அக்கிராம மக்களின் கால்நடைகளுக்கு மருந்துகள் வழங்கியும், ஊசி மற்றும் சிகிச்சை அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி மாணவிகள் உடனிருந்து செய்து, அனுபவ பயிற்சி பெற்றனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.

0 Comments