திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்

 


திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல். கணேசன் (92), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தஞ்சை பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமைக்குரிய இவர், வைகோ மதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து செயல்பட்டு, பின்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார். அவசரநிலைப் பிரகடனத்தின் போது (மீசா) சிறைவாசம் அனுபவித்த இவர், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னின்று செயல்பட்டதால் ‘மொழிப்போர் தளபதி’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.அன்னாரது மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments