சிவகங்கை: சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு கடுங்காவல் தண்டனை விதிப்பு


 சிவகங்கை மாவட்டம் பெரிய கோட்டை அஞ்சல், வைரவன்பட்டி பகுதியைச் சேர்ந்த சண்முகம் சுகுமார், சிவகங்கை சரோஜினி தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அமர்நாத் ஆகியோர்கள் மீது சிவகங்கை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வீட்டில் கடந்த 04.07.2025 நோட்டமிட்டு திருடிய வழக்கில் இவர்கள் இருவரும் கடந்த 21.07.2025 கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

இந்த வழக்கானது தஞ்சாவூர் குற்றவியல் வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, சாட்சியங்களின் அடிப்படையில் ஐந்து மாதங்களில் விரைந்து வழக்கானது நடைபெற்ற வந்த நிலையில், இவர்களுக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என்ற தகவலை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments