ராமநாதபுரம்: சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொங்கல் விழா





இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சண்முககுமாரபுரம்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களோடு  பெற்றோர்களும் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளியின் முன்பு மூன்று கரும்புகள் நட்டி நடுவில் அடுப்பு கூட்டி பானை வைத்து மாணவர்களும் பெற்றோர்களும் பொங்கலிட்டனர். அரிசி போடும் போது பாரம்பரிய முறைப்படி குலவையிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைப் போல் பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி ஒலியெழுப்பி மகிழ்ந்தனர். பின்னர் உழவுத் தொழிலுக்கு மூலமான சூரியனுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். அனைவருக்கும பொங்கலோடு கரும்பும் வழங்கப்பட்டது.

விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியை அ.தாஹிரா நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments