ஆர்.எஸ்.மங்கலத்தில் ஓபிஎஸ் நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்

 


அதிமுக  பொதுச் செயலாளர், எடப்பாடிகே.பழனிசாமி தலைமை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி  தலைமையில்  ஆர்எஸ் மங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் மு.காளைராஜா,  ஆர் .எஸ் மங்கலம் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்  கா.ராம கணேசன்,க. ஞானசேகரன்,சு. கண்ணன் கி.முனீஸ்வரன் ஆகியோர் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உடன்  ஆர் எஸ் மங்கலம் கிழக்கு ஒன்றியம் எஸ் ஆர் ஜி திருமலை  திருவாடானை மேற்கு ஒன்றிய தொழச் செயலாளர் ஆசை ராமநாதன் திருவாடானை வடக்கு ஒன்றிய கழகசெயலாளர் ஏ.ஆண்டவர் ஆகியோர் இருந்தனர்.

Post a Comment

0 Comments