தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூர், பனையூர், காயல்பட்டினம் பகுதியில் காணப்படும் கடல் சார் புதை படிமங்கள் குறித்த முதல் கட்ட கள ஆய்வுகள் மேற்கொள்ள கொல்கத்தா - உயிரியல் துறை அதிகாரிகள் தேபா ஸ்ரீ, சந்திரன், தோலா ராய் ஆகியோர் அடங்கிய விஞ்ஞானிகள் குழுவினர் இன்று மதியம் தூத்துக்குடி வந்தடைந்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது...
இவர்கள் வரும் 6, 7 ம் தேதிகளில் பனையூர் -குளத்தூர், பட்டினம் மருதூர் மற்றும் காயல்பட்டினம் பகுதியில் நாம் கண்டெடுத்து ஆவணப்படுத்தியுள்ள கடல்சார் புதைபடிமங்களின் எச்சங்கள் தொடர்பான முன் கள ஆய்வுகள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து தங்கள் ஆய்வு அறிக்கையினை தங்கள் துறை இயக்குநர் வாயிலாக மாவட்ட ஆட்சியர் வசம் சமர்ப்பித்து தொடர்பணிகளை மேற்கொள்வார்கள் என்றும்,
இவர்களின் ஆய்வுகள் நமக்கு இராபர்ட் ஓரம் வரைந்த வரைபடத்தில் காண்பிக்கப்படும் பாண்டியர்களின் முத்துக்கள் விளைவிக்கும் குளங்கள் தொடர்பான நமது ஆய்வின் புரிதல்களை மேலும் உறுதி செய்து அவை மண்ணில் புதையுண்ட கால கட்டங்களை துல்லியமாக கணக்கீடு செய்திட உதவிடும் என தான் மிகவும் நம்பிக்கையாக இருப்பதாகவும், இதன் மூலம் நம் தமிழர்களின் மேம்பட்ட பண்ணை குட்டை முறையினை குறித்த உண்மைகளை உலகுணர்த்தலாம் என்றும், இத்தகைய முன்னெடுப்பில் உடனே பரிந்துரை செய்து வரலாற்றினை மீட்டெடுக்க உதவி வரும் மாவட்ட ஆட்சியருக்கு தனது நன்றிகளையும் சக தொல்லியல் ஆர்வலர்கள் சார்பாக தெரிவித்தார்.

0 Comments