இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பார்த்திபனுரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் புறவழிச் சாலையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இடையாத்தூர் மற்றும் மேல குடியிருப்பு ஆகிய கிராமம் உள்ளது இக்கிராமங்களில் சுமார் 450 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இக்கிராமங்களுக்கு செல்லும் சாலை பத்து ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ளது தற்போது அந்த சாலை முழுவதுமாக சேதம் அடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையின் நடுவே ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
புறவழிச் சாலையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் செல்லும் இந்த சாலையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
அவசர காலங்களில் பிரசவம் மற்றும் விபத்து ஏற்படும்போது ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் போன்றவைகள் ஊருக்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
சம்மந்தப்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் சாலை அமைத்து தருமாறு பலமுறை மனு அளித்து கோரிக்கை வைத்தும் இன்றளவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கிடையில் மழைக்காலம் என்பதால் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் நிரம்பி காணப்படுவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இது சம்மந்தமாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சந்தித்து மேற்படி சாலையில் தற்காலிகமாக ஆங்காங்கே பழுது நீக்கும் பணி நடந்து வருவதை நிறுத்திவிட்டு நிரந்தரமான ஒரு புதிய தார் சாலை விரைவில் அமைத்து தருமாறு கோரிக்கை மனு அளித்தனர் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேற்படி அதிகாரி தற்காலிகமாக பழுது நீக்கும் வேலையை நிறுத்திவிட்டு நிரந்தரமான தார்ச்சாலை அமைத்து தர ஆவண ஏற்பாடுகள் செய்வதாக கூறினார் இதற்கு மேலும் காலதாமதம் செய்தால் கிராமமக்கள் போராட்டம் நடத்தஉள்ளனர்.


0 Comments