தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்த அமமுக...... டிடிவி தினகரன் அறிவிப்பு



 தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில் பாமக அந்த கூட்டணியில் சமீபத்தில் இணைந்தது. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொது மேடையில் தமிழகத்தின் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக கொண்டு வர திட்டமிட்டுள்ள நிலையில் இதற்காக தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. 

அந்த வகையில் தேமுதிகவிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தீவிரமாக தொடங்கியுள்ளது.இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனவும் அவர் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இணைய மாட்டோம் எனவும் கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகினார். இதனை தொடர்ந்து புதிய கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்பை வெளியிடுவதாக கூறிவந்த நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதாக அறிவித்தார். மேலும் இன்னும் ஓபிஎஸ் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தாங்கள் முடிவை அறிவிக்காத நிலையில் அவர்களும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகவே பேசப்படுகிறது.

Post a Comment

0 Comments