ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல் நாயக்கன்பட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு மின்னொளியில் கபடி போட்டி நடைபெற்றது.
இதில் பாம்புல் நாயக்கன்பட்டி, சேர்ந்தகோட்டை, செங்கப்படை, புதுக்கோட்டை, பார்த்திபனூர், செம்பட்டி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து 45 அணிகள் பங்கேற்றன. இதில் பாம்புல்நாயக்கன் பட்டி அணி முதலிடம் பெற்றது.
இந்த அணிக்கு ரூ.8000 ரொக்க பரிசு மற்றும் 8 அடி சுழற் கோப்பை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை அணி 2-ம்இடத்தை பிடித்தது. இந்த அணிக்கு ரூ.6000 மற்றும்7 அடி சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் முதல் 8 இடங்களை பிடித்த அணிகளுக்கு ரொக்கப்பணமும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.



0 Comments