தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகமுகவா்கள் மற்றும் வார்டு இளைஞரணி அறிமுகம் மாநகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அபிராமி மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஜோசப் அமல்ராஜ், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர் வரவேற்புரையாற்றினாா்.
வடக்கு மாவட்டச் செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் இளைஞர் அணியினா் தோ்தல் நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் திமுகவின் கொள்கைகளை முழுமையாக தொிந்து கொண்டு திமுக மீது வசை பாடுபவா்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்் வரவுள்ள சட்டமன்ற தோ்தல் நமக்கு முக்கியமானதாகும். திமுக 7வதுமுறையாகவும் தமிழக முதலமைச்சா் தளபதியாா் 2வது முறையாகவும் முதலமைச்சராக இளைஞர் அணியினா் அனைவரும் சபதம் ஏற்று பணியாற்றி 200 தொகுதி இலக்கு என்பதை அனைவரும் இணைந்து அடைய வேண்டும் என்று பேசினாா்கள்.
கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், பொருளாளா் ரவீந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன் சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநில பேச்சாளா் சரத்பாலா, தலைமை செயற்குழு உறுப்பினா் இராஜா, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், பிரவீன்குமாா், சங்கரநாராயணன், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் ராஜா பெரியசாமி, ராமச்சந்திரன், சூர்யகாந்த், ராஜா முனியசாமி, நிர்மல் சரவணகுமார், செந்தூர்பாண்டி மாநகர துணைச்செயலாளர் கனகராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, வட்டச்செயலாளர்கள் சுப்பையா, பொன்ராஜ், சக்திவேல், மூக்கையா,பாலகுருசாமி, செல்வராஜ், பத்மாவதி, சுரேஷ், லியோ ஜான்சன், சந்தனமாாிமுத்து, பொன்னப்பன், கதிரேசன், கவுன்சிலா்கள் ரெக்ஸ்லின், விஜயகுமாா், அந்தோணி பிரகாஷ் மாா்ஷலின், கந்தசாமி, ஜான், பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.


0 Comments