பெரம்பலூர் : தந்தை ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழா கோலாகலக் கொண்டாட்டம்



தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விழா, 16.10.2026 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண்மைத் தலைவர் முனைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜான் அசோக்குமார் முன்னிலை வகித்தார்.




 கல்லூரியின் முதல்வர் முனைவர் இறைவன் அருட்கனி அய்யநாதன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குச் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.




விழாவையொட்டி, கல்வி மற்றும் அறிவின் அடையாளமாக விளங்கும் சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், வேளாண்மைக் கல்வியின் முக்கியத்துவத்தையும் உழைப்பின் மேன்மையையும் போற்றும் வகையில் வேளாண்மைப் புத்தகங்கள், வேளாண்மைக் கருவிகள் மற்றும் கல்லூரியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்குப் பூஜைகள் செய்யப்பட்டன. ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.




விழாவின் நிறைவாக, நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல், சுண்டல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜெயசீலன் மற்றும் அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.









Post a Comment

0 Comments