ராமநாதபுரம் : பைனான்ஸ் வசூல் செய்ய சென்ற ஊழியரின் கழுத்தை அறுத்து புதைத்த சம்பவம்

 


 ராமநாதபுரம் மாவட்டம் வாலந்தரவை பகுதியை சேர்ந்தவர்  பிரேம்குமார் (26) பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 5ந் தேதி காலை வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற நிலையில் மாயமானார்.

பிரேம்குமார் பயன்படுத்திய இருசக்கர வாகனம் வாலாந்தரவை விளக்கு ரோடு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேம்குமாரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் அவருடைய செல்போன் எண்னை வைத்து துப்பு துலக்குவதில் சிக்கல் ஏற்பட்டதுபிரேம்குமார் கடைசியாக துத்திவலசையை  சேர்ந்த காளிதாஸ் என்பவரிடம் பேசியது தெரிய வந்ததையடுத்து அவரிடம்விசாரணை நடத்தினர்.தான் பஜாஜ் பைனான்ஸில் பணம் கடன் வாங்கி இருந்ததாக கூறி  காளிதாஸ் , அதற்காக தன்னை தொடர்பு கொண்ட பிரேம்குமார் உரிய தவணை பணத்தை வாங்கி சென்றதாக தெரிவித்தார்.

உச்சிப்புளி பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்ததில் காளிதாசை சந்தித்த பின்னர் பிரேம்குமார் மாயமானது தெரியவந்தது.

இதனால் காளிதாசை கேணிக்கரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று  விசாரித்த போது பிரேம்குமார் மாயமான வழக்கு துப்பு துலங்கியது.

கடந்த 5ந் தேதி மதியம் சுமார் இரண்டு மணி அளவில் பஜாஜ் பைனான்ஸ்க்கு  செலுத்த வேண்டிய பணத்தை வசூல் செய்வதற்காக பிரேம்குமார் துத்திவலசை சென்றுள்ளார்.

காளிதாஸ் தான் தோப்பு வலசை பகுதியில் உள்ள பனங்காட்டுப் பகுதியில்  கள்ளு குடித்து கொண்டு இருப்பதாகவும், பணத்தை தன்னிடம் இங்கு வந்து வசூல் செய்து கொள்ளும்படி கூறியதால் தனது இருசக்கர வாகனத்தில் பிரேம்குமார் தோப்புவலசை பனங்காட்டு பகுதிக்கு  சென்றுள்ளார்.

பிரேம் குமார் பனங்காட்டுக்குள் சென்ற போது  பனைமரத்தின் அடிபகுதியில்  மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு பிரேம்குமாரின் பின் கழுத்தில் காளிதாஸ் வெட்டியுள்ளார் கழுத்தில் வெட்டுப்பட்ட பிரேம்குமார் திரும்பிய போது மீண்டும் முன் கழுத்தில் ஆழமாக காளிதாஸ் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பிரேம் குமார் உயிரிழந்தாக காளிதாஸ் கூறியுள்ளார்.

பின்னர் உடலை பனை மரத்தின்  காய்ந்த ஓலைகளை போட்டு மூடிவிட்டு அருகேஉள்ள  அவரது தம்பி வீட்டில் கட்டிட வேலை நடைபெற்று வருவதால் அங்கு சென்றுமண்வெட்டியை எடுத்து வந்த காளிதாஸ் இரண்டரை அடி ஆழத்திற்கு தோண்டி  பிரேம்குமார் உடலை புதைத்து வைத்ததாக கூறினார் பின்னர் 

பிரேம்குமாரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வாலந்தரவை விளக்கு ரோடு பகுதியில் விட்ட காளிதாஸ், பிரேம்குமாரின் இரண்டு செல்போன்களையும் சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் உள்ள தண்ணீருக்குள் வீசிவிட்டு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வீட்டிற்கு  நடந்தே வந்ததாக  காளிதாஸ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்

இதற்கு ஆதாரமான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், பிரேம்குமார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். தவணை கட்ட தாமதமானதால், தனது வீட்டுக்கு பணம் வசூல் செய்ய வந்த பிரேம் குமார், தன்னைப் பற்றியும் தனது மகளைப் பற்றியும் ஆபாசமாகவும், தவறாகவும் பேசியதால் ஆத்திரம் அடைந்ததாகவும். அதனால் பிரேம்குமாரை  கொன்று புதைத்ததாக காளிதாஸ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக  பிரேம்குமார் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை திருடி உச்சிப்புளியில் உள்ள அடகு கடையில் காளிதாஸ் அடகு வைத்த நிலையில் அதனை போலீசார் மீட்டனர்.காளிதாஸ் அடையாளம் காட்டிய பனங்காட்டு பகுதியில் வருவாய்துறையினர், போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர் குழுவினர் பிரேம்குமார் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினசரி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று வரும் பிரேம்குமார் வலிமையான நபர் என்பதால் அவரை தனியாக ஒரு நபர் வெட்டி கொலை செய்திருக்க முடியாது, இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகிக்கும் பிரேம்குமாரின் உறவினர்கள் அனைவரையும் கைது செய்ய கோரி மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வழுதூர் விளக்கு ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments